‘சரியான திசை நோக்கிய முதல் அடி: கமல்ஹாசன்
ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க மறுத்திருப்பது குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்தபோது, ‘சரியான திசை நோக்கிய முதல் அடி என்று கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய உரிமம் சமீபத்தில் காலாவதி ஆனது. இந்த நிலையில், ஆலையில் பராமரிப்பு பணிகள் மட்டுமே நடந்து வந்த நிலையில். ஆலையை தொடர்ந்து இயங்க அனுமதிக்கக் கோரி அந்நிறுவனம் சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் இந்த விண்ணப்பத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்து விட்டது. இதன் காரணமாக ஆலையில் பராமரிப்பு பணிகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் நீட்டித்துள்ளது.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த நடவடிக்கை குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு வாழ்த்துகள். சரியான திசை நோக்கிய முதல் அடிதான் ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி மறுப்பு. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உங்களுக்குத் துணையாய் மக்களும் கண்காணிக்கத் துவங்கி விட்டார்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) April 10, 2018