நடிகை கல்பனாவின் மகளுக்கு அடித்த கதாநாயகி அந்தஸ்து
பாக்யராஜ் நடித்து இயக்கிய ‘சின்னவீடு’ படத்தில் அறிமுகமாகிய நடிகை கல்பனாவுக்கு அந்த படத்திற்கு பின்னர் கதாநாயகி வேடம் கிடைக்கவில்லை. இருப்பினும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வந்த கல்பனா கடைசியாக கார்த்தியின் ‘தோழா’ படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு மரணம் அடைந்த கல்பனாவின் மகள் ஸ்ரீசங்க்யா தற்போது மலையாள படம் ஒன்றின் நாயகியாகியுள்ளார். இவர் நடிக்கும் படத்தின் டைட்டில் ‘குஞ்சியம்மாளும் அஞ்சமக்காளும்’ என்பது ஆகும்
இந்த படத்தின் நாயகனாக இர்ஷாத் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் கலாபவன் ஷாசான், பஷனம் ஷாஜி, ஸ்ரீஜித் ரவி, பினு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகி வரும் இந்த படத்தை சுமேஷ் லால் இயக்குகிறார். கலாரஞ்சனி, கல்பனா, ஊர்வசி ஆகிய மூவரைத் தொடர்ந்து அவர்கள் குடும்பத்தில் இருந்து ஸ்ரீசங்க்யாவும் சினிமாவுக்கு வந்துள்ளார்.