மும்பைக்கு மீண்டும் தோல்வி: த்ரில் வெற்றி பெற்ற ஐதராபாத்

மும்பைக்கு மீண்டும் தோல்வி: த்ரில் வெற்றி பெற்ற ஐதராபாத்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது போட்டியான ஐதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் நேற்று ஐதராபாத் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த மும்பை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 147 ரன்கள் எடுத்தது. பின்னர் 148 ரன்கள் எடுத்தால் என்ற நிலையில் 20வது ஓவரின் கடைசி பந்தில் 4 ரன்கள் அடித்ததன் மூலம் 151 ரன்கள் எடுத்து ஐதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது.
ஹூடா நேற்று பொருப்புடன் விளையாடி ஐதராபாத் அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இரண்டாவது தோல்வியையும், ஐதராபாத் அணி இரண்டாவது வெற்றியையும் பெற்றன.

Leave a Reply