சித்தராமையா வேறு தொகுதிக்கு ஓட்டமெடுத்தது ஏன்? அமித்ஷா
கர்நாடகாவில் வரும் மே 12ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து அங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பாஜக தலைவர் அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் செய்தபோது பா.ஜ.அலையால் கர்நாடகா முதல்வர் சித்தராமையா தனது தொகுதியை விட்டு வேறு தொகுதிக்கு ஓட்டமெடுத்துவிட்டதாக தெரிவித்தார்
அவர் மேலும் கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றி மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் மாநிலம் முழுவதும் பா.ஜ.க அலை வீசுவதால் மிரண்டு போன காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தனது சொந்த தொகுதியான வருணா சட்டசபை தொகுதியில் இருந்து சாண்டீஸ்வரி தொகுதிக்கு ஓட்டமெடுத்துவிட்டார்.
நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க பெருபான்மை தொகுதிகளை வென்று வலுவான ஆட்சியை அமைக்கும். எடியூரப்பா முதல்வராக பதவியேற்பார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.