ரூ.2000 நோட்டுகள் மாயாமாகி வருவது ஏன்? மபி முதல்வர் கேள்வி?

ரூ.2000 நோட்டுகள் மாயாமாகி வருவது ஏன்? மபி முதல்வர் கேள்வி?

பண மதிப்பிழப்பு நடவடிக்கை பின்னர் தாராளமாக புழங்கிய ரூ.2000 நோட்டு தற்போது அதிக புழக்கத்தில் இல்லை. பெரும்பாலானோர்களிடம் ரூ.500 மட்டுமே புழக்கத்தில் உள்ளது. இது ஏன்? என்று மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசியபோது, ‘பணமதிப்பிழப்புக்கு முன்பு 15 லட்சம் ரூபாய் புழக்கத்தில் இருந்தது. பணமதிப்பிழப்புக்கு பிறகு இதன் மதிப்பு ரூ.16.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை சந்தையில் காண முடியவில்லை.

இந்த ரூபாய் நோட்டுக்கள் எங்கே செல்கிறது? அதனை புழக்கத்தில் விடாமல் யார் வைத்து இருப்பது? பண பற்றாக்குறையை ஏற்படுத்தும் நபர்கள் யார்? பிரச்சனை ஏற்படுத்த இது போன்று சதி செய்யப்படுகிறது. இது குறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்

Leave a Reply