கோடை விடுமுறையில் விஐபி சிபாரிசு கிடையாது: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

கோடை விடுமுறையில் விஐபி சிபாரிசு கிடையாது: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால் வழக்கத்தை விட அதிகமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கோடை விடுமுறை முடியும்வரை விஐபி சிபாரிசு கடிதங்கள் தரிசனத்திற்கு ஏற்று கொள்ளப்படாது என்றும் இந்த நடைமுறை இன்றுமுதல் தொடங்கவுள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது,

இதுகுறித்து இன்று தேவஸ்தான நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: கோடை விடுமுறை என்பதால் தற்போது பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும். எனவே, திருப்பதியில் கோடை விடுமுறையை முன்னிட்டு வாரத்தில் மூன்று நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மேலும், இன்று முதல் ஜூலை மாதம் 16-ம் தேதி வரை விஐபி சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்படுள்ளது.

Leave a Reply