சிங்கப்பூரில் பெருமாள் கோவிலை திறந்து வைத்த பிரதமர் லீ ஹ்செய்ன் லூங்
சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகமாக வாழும் லிட்டில் இந்தியா என்ற பகுதியில் 1854-ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சமீபத்தில் சுமார் 45 லட்சம் சிங்கப்பூர் டாலர் செலவில் புனரமைக்க தீர்மானிக்கப்பட்டு அதன் வேலையும் சுறுசுறுப்பாக நடந்தது. தற்போது புத்தம் புது வொலிவுடன் காணப்படும் இந்த கோவிலை இன்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்செய்ன் லூங் திறந்து வைத்து வழிபாடு செய்தார். அவருடன் 4 மந்திரிகள் உள்பட சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் இந்த மஹாசம்ப்ரோக்ஷனம் விழாவில் கலந்து கொண்டனர்.
2004-ம் ஆண்டு சிங்கப்பூர் பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்து ஆலய விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவுக்கு பின்னர் தொடர்ந்து 45 நாட்களுக்கு கோலாகலமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறும், பின்னர் இந்த ஆலயத்தின் ‘மண்டல அபிஷேகம்’ வெகு சிறப்பான முறையில் நடைபெறும்.