உலக அழகியை விமர்சித்த திரிபுரா முதல்வருக்கு குவியும் கண்டனங்கள்

உலக அழகியை விமர்சித்த திரிபுரா முதல்வருக்கு குவியும் கண்டனங்கள்

சமீபத்தில் நடந்த திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் இம்மாநிலத்தில் முதல்வராக பதவியேற்றவர் பிப்லப் தேவ். இவர் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசியபோது, இந்தியாவில் இருந்து இதுவரை ஐந்து பேரை உலக அழகி பட்டத்துக்கு தேர்வு செய்துள்ளனர். டயானா ஹைடன் கூட உலக அழகி பட்டம் வென்றுள்ளார். ஆனால், அவரிடம் இந்திய அழகை நான் காணவில்லை. ஐஸ்வர்யா ராயிடம் மட்டுமே அந்த அழகு உள்ளது” என்று கூறினார்.

டயானா ஹைடன் குறித்த விமர்சனத்துக்கு திரிபுரா முதல் மந்திரி பிப்லப் தேபுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இவர் ஏற்கனவே மகாபாரதம் காலத்திலேயே இணையதளம் இருந்தது எனக்கூறி சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply