மும்பைக்க்கு இரண்டாவது வெற்றி: சென்னையை வீழ்த்தியது
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று புனேவில் நடந்த போட்டீயில் சென்னை அணியை மும்பை அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஒரே வெற்றியால் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு முன்னேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு செய்ததால் சென்னை அணி. முதலில் பேட்டிங் செய்தது. சுரேஷ் ரெய்னா மற்றும் ராயுடு அதிரடியால் அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 169 ரன்கள் எடுத்தது.
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி, முந்தைய போட்டிகளில் செய்த தவறுகளை செய்யாமல் விக்கெட்டுக்களை காப்பாற்றி நிதானமாக விளையாடியது. பின்னர் கடைசி ஐந்து ஓவரில் அதிரடியாக விளையாடி 19.4 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 56 ரன்களும், லீவீஸ் 47 ரன்களும், யாதவ் 44 ரன்களும் எடுத்தனர். ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.