கர்நாடக சட்டமன்ற தேர்தல்: 8% மட்டுமே பெண் வேட்பாளர்கள்
கர்நாடக சட்டமன்றத்திற்கு வரும் மே 12ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநிலத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் சதவீதம் வெறும் 8% என்பது தெரியவந்துள்ளது.
இந்த தேர்தலில் மொத்தம் 2,655 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 8% பேர் மட்டுமே பெண்கள்! கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 5.8% பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றனர்.
அந்ந மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் 222 வேட்பாளர்களும் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும் ஜனதா தளம் கட்சியின் தரப்பில் 201 வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். முல்பகல் தொகுதியில் அதிகபட்சமாக 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.