கோவையில் இந்தியாவின் முதல் பூச்சிகள் அருங்காட்சியகம்
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறை சார்பில் இந்தியாவின் முதன்முதலாக பூச்சி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த இந்த அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக நேற்று திறக்கப்பட்டுள்ளது.
இந்த பூச்சி அருங்காட்சியகத்துக்கு, பூச்சியியல் துறையை சேர்ந்த 12 பேர் கொண்ட குழுவினர் மாணவர்கள் இந்தியா முழுவதும் 382 நாட்களில் 89 ஆயிரத்து 249 கி.மீ. தூரம் பயணித்து 84 ஆயிரம் வகையான பூச்சிகளை சேகரித்தனர். இங்கு வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்பூச்சிகள், வண்டுகள், கரப்பான் பூச்சிகள், பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகள், விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் உள்பட ஏராளமான பூச்சிகள் இருக்கின்றன.
வேளாண் பல்கலைக்கழக வேலை நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 வரை பார்த்து மகிழலாம். பெரியவர்களுக்கு ரூ.50-ம், சிறியவர்களுக்கு ரூ.30-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் இருந்து ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படும்.