உங்களது ருசியான மனைவிக்கும் நன்றி: பிரான்ஸ் அதிபரின் சர்ச்சை பேச்சு

உங்களது ருசியான மனைவிக்கும் நன்றி: பிரான்ஸ் அதிபரின் சர்ச்சை பேச்சு
ஆஸ்திரேலியா நாட்டில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரான்ஸ் அதிபர் மாக்ரான் அவர்களுக்கு நேற்று ஆஸ்திரேலியா பிரதமர் மால்கம் டர்ன்புல் மாக்ரான் மற்றும் அவரது மனைவி விருந்து அளித்தனர்.. இந்த விருதினை அடுத்து, இரு தலைவர்களும் சிட்னியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய மாக்ரான், “இந்த சிறப்பான வரவேற்புக்கு உங்களுக்கு (ஆஸி. பிரதமர்) நன்றி கூறிக்கொள்கிறேன். உங்களது ருசியான மனைவிக்கும் நன்றி” என அவர் கூறினார். ருசியான மனைவி என்ற வார்த்தை பதம் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆஸ்திரேலிய மீடியாக்கள் இதனை மேலும் சூடாக்க இவ்விவகாரம் சர்ச்சையானது.
இந்நிலையில், மாக்ரான் கருத்துக்கு டர்ன்புல் விளக்கமளித்துள்ளார். “மாக்ரானின் கருத்தை மேற்புகழ்ச்சியாகவே எனது மனைவி எடுத்துக்கொண்டார்” என அவர் கூறியுள்ளார். 

Leave a Reply