தமிழ் ரசிகர்களுக்காக மகேஷ்பாபு, ராம்சரண், அல்லு அர்ஜூன் எடுக்கும் முயற்சிகள்

தமிழ் ரசிகர்களுக்காக மகேஷ்பாபு, ராம்சரண், அல்லு அர்ஜூன் எடுக்கும் முயற்சிகள்

இந்த ஆண்டு வெளீயான தமிழ்ப்படங்களில் சுந்தர் சி இயக்கிய ‘கலகலப்பு 2’ படம் தவிர மற்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளருக்கு நஷ்டம் தான் ஏற்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் மகேஷ்பாபுவின் பாரத் அனே நேனு, ராம்சரணின் ரங்குஸ்தலம் ஆகிய படங்கள் தமிழகத்தில் நல்ல வசூலை பெற்று விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. அதேபோல் இன்று வெளியாகவுள்ள அல்லு அர்ஜூன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறாது.

நம்மூர் அஜித், விஜய், சூர்யா ஆகியோர்களுக்கு தெலுங்கு மாநிலங்களில் நல்ல மார்க்கெட் இருப்பது போல் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் தமிழிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக மகேஷ்பாபு, ஜூனியர் என்.டிஆர், ராம்சரண் தேஜா, அல்லு அர்ஜூன் ஆகியோரகளின் பார்வை தமிழை நோக்கியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply