இருட்டு அறையில் முரட்டு குத்து: திரைவிமர்சனம்
ஹரஹர மகாதேவகி என்ற முதல் அடல்ட் படத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயகுமார், மீண்டும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து அடுத்த அடல்ட் படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் முதல் படம் போல் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
கவுதம் கார்த்தி, அவருக்கு பார்த்த பெண் வைபவி, கவுதமின் நண்பர் ஷாரா மற்றும் அவரது காதலி யாஷிகா ஆகிய நால்வரும் பாங்காக் செல்கின்றனர். அங்கு அவர்கள் தங்கும் பங்களாவில் ஒரு பேய் இருக்கின்றது. அந்த பேய் வெர்ஜின் பையனுடன் செக்ஸ் உறவு கொள்ள வேண்டும் என்று 25 வருடங்களாக காத்திருக்கின்றது. அந்த பேயிடம் மாட்டி கொள்ளும் கவுதம் கார்த்திக், ஷாரா தப்பித்தார்களா? அல்லது அவர்களது வெர்ஜினை இழந்தார்களா? என்பது தான் மீதிக்கதை
ஹரஹர மகாதேவகி படத்தில் நடித்த அதே கலகலப்பான நடிப்பை கவுதம் கார்த்திக் அளித்துள்ளார். இன்றைய இளைஞர்களுக்கு பிடித்த முகம், காமெடி நடிப்பு என நடிப்பில் பாஸ் செய்துவிடுகிறார்
கவுதமின் நண்பராக வரும் ஷாராவிற்கு பதிலாக இயக்குனர் வேறு யாரையாவது தேர்வு செய்திருக்கலாம். மனிதர் காமெடி என்ற பெயரில் கழுத்தறுக்கின்றார்.
வைபவி, யாஷிகா இருவரில் யார் அதிகமாக கவர்ச்சி காட்டுவது என்று போட்டி போட்டுக்கொண்டு நடித்துள்ளனர். ஐந்து வயது குழந்தைக்கான உடை தான் இருவருக்கும் படம் முழுவதும்
மொட்டை ராஜேந்திரன், பாலாசரவணன், கருணாகரன், மதுமிதா, ஜான் விஜய் ஆகியோர்களின் நடிப்பு ஓகே
கதையே இல்லாமல், அழுத்தமான காட்சிகள் இல்லாமல் காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்களையும் அதற்கேற்ற காட்சிகளையும் வைத்தே படத்தை நகர்த்துவிடுகிறார் இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார். அவசரமாக எடுக்கப்பட்ட படம் என்பதால் கற்பனை வறட்சி படம் முழுவதும் தெரிகிறது.
பாலமுரளி பாபுவின் இசையில் ஒரு பாடல் கூட தேறவில்லை. பின்னணி இசையும் சுமார்தான்
மொத்தத்தில் ஷகிலா பட ரசிகர்களுக்கு ஏற்ற விருந்துதான் இந்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படம்
ரேட்டிங் 2.5/5