கென்யாவில் வரலாறு காணாத மழை: 112 பேர் பலி
கென்யா நாட்டில் கடந்த சில ஆண்டுகளா பெய்திராத வரலாறு காணாத மழை காரணமக ஏற்பட்ட வெள்ளத்தினால் இதுவரை சுமார் 112 பேர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து கென்யா நாட்டின் செஞ்சிலுவை சங்க பொதுச்செயலாளர் அப்பாஸ் கெல்லட் கூறுகையில், “ நாடு முழுவதும் மார்ச் மாதம் தொடங்கி இதுவரை 112 பேர் மழை, வெள்ளத்தால் பலியாகி உள்ளனர். இதன் காரணமாக 48,117 குடும்பங்களை சேர்ந்த சுமார் 2,60,200 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். 21 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நாசமடைந்தன. 20 ஆயிரம் கால்நடைகள் இறந்துள்ளன
கென்யாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப்பணிகள் துரித் வேகத்தில் நடந்து வருவதாகவும், விரைவில் அங்கு இயல்பு நிலை திரும்பும் என்றும் கென்யா அரசு தெரிவித்துள்ளது