7 இந்தியர்கள் கடத்தல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அட்டகாசம்

7 இந்தியர்கள் கடத்தல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அட்டகாசம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் 7 இந்திய என்ஜினீயர்களை தலீபான் பயங்கரவாதிகள் கடத்தியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் பாக்லான் மாகாணத்தின் தலைநகர் புல் இ கோம்ரே அருகேயுள்ள பாக் இ ஷமால் என்ற கிராமத்தில் துணை மின் நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் நேற்று பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். இந்த பேருந்தில் உள்ளவர்களில் 7 பேர் இந்தியர்கள் என்றும், அவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவம் குறித்து டெல்லியில் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ஆப்கானிஸ்தானில் பாக்லான் மாகாணத்தில் இந்தியர்கள் கடத்தப்பட்டது பற்றி நாங்கள் அறிந்து இருக்கிறோம். இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகளை தொடர்பு கொண்டு வருகிறோம். கூடுதல் விவரங்களுக்காக காத்து இருக்கிறோம்” என குறிப்பிட்டார்.

காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆப்கானிஸ்தான் முழுவதும் ஏராளமான உள்கட்டமைப்பு திட்டப்பணிகளில் 150-க்கும் மேற்பட்ட இந்திய என்ஜினீயர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும் வேலை பார்த்து வருகின்றனர். இப்போது கடத்தப்பட்டு உள்ள இந்திய என்ஜினீயர்கள் பத்திரமாக மீட்கப்படுவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்

Leave a Reply