ரூ.50 கோடி செலவில் ஜெயலலிதா நினைவிடம்: அடிக்கல் நாட்டு விழாவில் ஈபிஎஸ்-ஓபிஎஸ்

ரூ.50 கோடி செலவில் ஜெயலலிதா நினைவிடம்: அடிக்கல் நாட்டு விழாவில் ஈபிஎஸ்-ஓபிஎஸ்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் நினைவிடம் அமைக்க ஏற்கனவே ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று அந்த நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்காக ரூ.50.80கோடியில் அளவில் சமீபத்தில் டெண்டா் விடப்பட்டது என்பது தெரிந்ததே. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஃபீனிக்ஸ் பறவை வடிவம் கொண்ட நினைவிடம் இன்னும் ஒரு ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு ஜெயலலிதா பிறந்த நாளில் இந்த புதிய நினைவிடம் திறக்கப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply