சாலையில் பரவிய நெருப்புக்குழம்பு: அதிர்ச்சியில் ஹவாய் தீவு மக்கள்
ஹவாய் தீவில் சமீபத்தில் புகைந்து கொண்டிருந்த எரிமலை தற்போது வெடித்து நெருப்புக்குழம்புகளை வெளியேற்றி கொண்டிருக்கின்றது. இந்த நெருப்புக்குழம்புகள் மக்கள் வாழும் பகுதி வரை பரவிவிட்டதால் அந்த பகுதி மக்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
எரிமலையில் இருந்து பொங்கிய நெருப்புக்குழம்புகள் நகரின் முக்கிய சாலைகளில் பரவி வருவதால் அந்த பகுதியில் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த நெருப்புக்குழம்புகளுக்கு 35 வீடுகள் தீக்கிரையாகிவிட்டதாகவும், அதில் வாழ்ந்த சுமார் 1700 பேர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நெருப்புக்குழம்பு மொத்தம் 12 மைல்கள் வரை பரவியுள்ளதாகவும், இதில் இருந்து பொதுமக்களை காப்பாற்றும் பணியில் மீட்புப்பணியினர் போர்க்கால அடிப்படையில் பணிபுரிந்து கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.