என்னை கொல்ல சதி: முதல்வர் பரபரப்பு பேட்டி
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பெங்காலி செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
முதலில் ஒருவருடைய கேரக்டரை படுகொலை செய்து, பின்னர் அவரை தீர்க்க வேண்டும் என்ற முறையில் சதி நடக்கிறது. நான் மரணத்திற்கு பயப்படுபவள் கிடையாது. என்னை கொலை செய்ய ஏற்கனவே திட்டமிடப்பட்டது.
அரசியல் கட்சி என்னை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டிஉள்ளது என்பது எனக்கு தெரியும். என்னை கொலை செய்யும் பணி கொடுக்கப்பட்டு உள்ள நபர்கள் என்னுடைய வீடு, அலுவலகம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளை எல்லாம் உளவு பார்த்துவிட்டார்கள்.
பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் மற்றும் உளவுத்துறை, வீட்டை மாற்றுமாறு எனக்கு அறிவுரையை வழங்கினர்.
என்னுடைய மக்களை நான் விரும்புகிறேன் என்றும் அவர்களின் வளர்ச்சிக்காக பணியாற்றுவேன். என்னை யாரும் மிரட்டவும் முடியாது. மக்களுக்கான என்னுடைய பணியை தடுக்கவும் முடியாது என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்