ஒரே படத்தில் சூர்யா, மோகன்லால், அல்லு சிரிஷ்
ஒரு திரைப்படத்தில் ஒரு பிரபல நடிகர் நடித்தாலே அந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்படும் நிலையில் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் ஒன்றில் மூன்று மாநில பிரபல நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.
நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்.ஜி.கே.’ படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தை அடுத்து கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார்.
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மோகன்லாலை அடுத்து முக்கிய ஒரு பிரபலம் இப்படத்தில் இணைந்திருக்கிறார். அவர்தான் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ்
ஒரே படத்தில் சூர்யா, மோகன்லால், அல்லு சிரிஷ் நடிக்கவுள்ளதால் இந்த படத்திற்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.