முதல்வரை முகநூலில் விமர்சித்த இளைஞர் கைது

முதல்வரை முகநூலில் விமர்சித்த இளைஞர் கைது

ஒருபக்கம் பெண் பத்திரிகையாளர்களை விமர்சித்த எஸ்.வி.சேகரை நீதிமன்றம் உத்தரவிட்டும் கைது செய்யாமல் காவல்துறையினர் இருந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் முதல்வரை அதே முகநூலில் விமர்சனம் செய்த இளைஞர் ஒருவரை அதே காவல்துறை உடனே கைது செய்துள்ளது.

திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த ஒருவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியை விமர்சனம் செய்து முகநூலில் பதிவு செய்த நிலையில் அந்த இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் தினேஷ்.

இவர் தனது முகநூலில் “இறயமங்கலம் பெருமாள் மலை அருகே 250 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை வாங்குவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் தங்கமணியும் பினாமிகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று பதிவு செய்துள்ளார்.’ இந்த பதிவு காரணமாக அவர் மீது அவதூறு வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். பள்ளிப்பாளையம் அ.தி.மு.க., நகரச் செயலாளர் வெள்ளியங்கிரி என்பவர் தினேஷ் மீது புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply