கர்நாடக குழப்பம் எதிரொலி: பீகார், கோவாவில் திடீர் குழப்பம்
தனிப்பெரும் கட்சி என்ற வகையில் கர்நாடக மாநிலத்தில் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளதால் அதே காரணத்தை கூறி தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கோவாவில் காங்கிரஸ் கட்சியும் பீகாரில் லாலுபிரசாத் யாதவ் கட்சியும் போர்க்கொடி தூக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவா மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் இப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கலகக் குரல் எழுப்பியுள்ளது. கோவாவைத் தொடர்ந்து பீகாரில் ஆர்ஜேடி போர்க்கொடி தூக்கியுள்ளது. இதனால் பெரும் குழப்ப நிலை ஏறபட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு பீகார் தேர்தலில் ஆர்ஜேடி 80; ஜேடியூ 70; பாஜக 53 இடங்களைப் பெற்றன. முதலில் ஆர்ஜேடி ஆதரவுடனும் தற்போது பாஜக ஆதரவுடனும் ஜேடியூ அரசு நடைபெற்று வருகிறது. கர்நாடகா ஆளுநர் முடிவின் அடிப்படையில் தனிப்பெரும் கட்சியான 80 எம்.எல்.ஏக்களைக் கொண்ட தங்களையே ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்கிறது ஆர்ஜேடி. அதனால் ஜேடியூ- பாஜக அரசை கலைத்துவிட்டு தங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்கிறது ஆர்ஜேடி