மெரினாவில் நினைவேந்தல் பேரணி: வைகோ கைதாகி விடுதலை
சென்னை மெரீனாவில் தடையை மீறி நினைவேந்தல் பேரணியில் கலந்து கொண்ட வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலை சம்பவத்தை நினைவுகூரும் வகையில்
ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரீனாவில் நினைவேந்தல் பேரணி நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் அதேபோல் நினைவேந்தல் பேரணி நடத்தவுள்ளதாக 13 இயக்கங்கள் அறிவித்திருந்தன
ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் மெரீனாவில் எந்த பேரணிக்கும் காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. அதேபோல் நேற்றும் இந்த பேரணிக்கு காவல்துறாஇ அனுமதி வழங்கவில்லை. ஆனால் மெரினாவில் தடையை மீறி பேரணியில் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதனால் பேரணியில் கலந்து கொண்டவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார் பின்னர் கைதான அனைவரையும் விடுவித்தனர்
விடுதலைக்கு பின்னர் வைகோ கூறியபோது,“மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் நினைவேந்தல் நிகழ்ச்சியின் நோக்கம்; இலங்கை ராணுவத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும்” என கூறினார்.