தூத்துகுடி விவகாரம்: லண்டன் ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் போராட்டம்

தூத்துகுடி விவகாரம்: லண்டன் ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் போராட்டம்

தூத்துகுடியில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 11 பேர்கள் பலியான கொடூர சம்பவத்திற்கு தமிழக அரசும் காவல்துறையுமே காரணம் என்று கூறி பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துகுடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் தங்கியிருக்கும் லண்டன் வீட்டின் முன் லண்டன்வாழ் தமிழர்கள் போராட்டம் நடத்தியதால் லண்டனில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் வீடு அமைந்துள்ள பகுதியின் முன் குவிந்த லண்டன் வாழ் தமிழர்கள் அனில் அகர்வாலுக்கு எதிரக கோஷங்களை எழுப்பினர். மேலும் கைகளில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply