தூத்துகுடி சம்பவத்தை திசை திருப்பவே ஜெயலலிதா ஆடியோ: ஸ்டாலின் குற்றச்சாட்டு

தூத்துகுடி சம்பவத்தை திசை திருப்பவே ஜெயலலிதா ஆடியோ: ஸ்டாலின் குற்றச்சாட்டு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகச்சாமி தலைமையிலான கமிஷன் விசாரணை செய்து கொண்டு வரும் நிலையில் திடீரென ஜெயலலிதாவின் ஆடியோ ஒன்று நேற்று வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு அதிகளவு சர்க்கரை உணவுபொருட்கள் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அவரே தனது கைப்பட என்னென்ன உணவுகள் வேண்டும் என்று எழுதிய குறிப்பு ஒன்றும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தை திசை திருப்பவே ஜெயலலிதாவின் ஆடியோ வெளியிடப்பட்டிருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்

தூத்துக்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காவல் துறையினா் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினா் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முன்னாள் முதல்வா் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது பேசிய ஆடியோ பதிவை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து கூறிய மு.க.ஸ்டாலின், ‘தூத்துக்குடி துப்பாக்சிச்சூடு சம்பவம் பூதாகரமாகியுள்ள நிலையில் இச்சம்பவத்தை திசை திருப்பும் விதமாகவே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் வாயிலாக ஜெயலலிதா பேசிய ஆடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஸ்டொ்லைட் ஆலையை மூட அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார்

Leave a Reply