இன்று தூத்துகுடி செல்கிறார் ரஜினிகாந்த்
தூத்துகுடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லவும், காயமடைந்தவர்களை நேரில் சந்திக்கவும் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூத்துகுடி செல்லவுள்ளார்.
விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள ரஜினிகாந்த் முதன்முறையாக மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதால் இந்த தகவல் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக இடம்பெற்றுள்ளது.
ரஜினியின் காலா திரைப்படம் வரும் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால் ரஜினிகாந்த் விளம்பரத்திற்காகா மக்களை சந்திக்கவுள்ளதாக ஒருசிலர் கூறிவந்தாலும் ரஜினியின் வருகையை அனைத்து அரசியல் கட்சிகளும் கவலையுடன் எதிர்நோக்குகின்றன.
கமல்ஹாசன், ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் தூத்துகுடிக்கு சென்றுபோது ஏற்படாத பரபரப்பு ரஜினி செல்லவுள்ளதாக கூறப்பட்டபோது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது