வங்கி கணக்குகளை திருடும் கேர்ள் பிரண்ட்: அதிர்ச்சி தகவல்
மொபைல் போனில் உள்ள வங்கி கணக்குகளை கேர்ள் பிரண்ட் என்னும் வைரஸ் திருடுவதாகவும், எனவே இதுகுறித்து ஸ்மார்ட்போன் பயனாளிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் இந்திய கணினி அவசர நிலை பொறுப்புக்குழு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய கணினி அவசர நிலை பொறுப்புக்குழு அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: தற்போது இணையவழிக் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், பயன்பாட்டாளர்கள் யாரும் தேவையில்லாமல் வரும் இமெயில்கள் எதையும் ஓபன் செய்ய வேண்டாம். ஒரு வேளை உங்களுக்கு தெரிந்த நபர் இமெயில் அனுப்பியிருந்தால் கூட, அதில் உள்ள யுஆர்எல் கிளக் செய்ய வேண்டாம். சம்பந்தப்பட்ட நபரிடம் அது என்னவென்று கேட்டு விட்டு, முக்கியமானவை என்றால் ஆண்டி வைரஸ் மூலம் ஸ்கேன் செய்து பயன்படுத்துங்கள். இதே போல், சுருக்கமான யுஆர்எல் லிங்க் உடைய எதையும் ஓபன் செய்யம் போது மிகக்கவனமாக இருக்கவும். கூகுள் பிளே ஸ்டோரில் வெரிஃபை செய்யப்பட்ட மொபைல் ஆப்களை மட்டும் பயன்படுத்தவும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.