19 வயது பெண்ணுடன், 18 வயது ஆணை சேர்த்து வைத்த கேரள ஐகோர்ட்

19 வயது பெண்ணுடன், 18 வயது ஆணை சேர்த்து வைத்த கேரள ஐகோர்ட்

18 வயதான ஆணும், 19 வயதான பெண்ணும் திருமண வயதை அடையும் வரை லிவிங் டுகெதர்’ முறையில் சேர்ந்து வாழலாம் என்றும் அதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. என்றும் கேரள ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள ஆழப்புழா நகரைச் சேர்ந்த முகம்மது ரியாத் என்பவரின் மகளை, இளைஞர் ஒருவர் கடத்திச் சென்றுவிட்டார், அவரைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று ஆட்கொணர்வு மனுவைக் ரியாத் கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து போலீஸார், ரியாத்தின் மகளையும், அந்த இளைஞரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். ஆனால், அவர்கள் இருவரும் தாங்கள் திருமணம் செய்து சேர்ந்து வாழ்வதாகவும் தெரிவித்ததால் இருவரையும் காப்பகத்தில் சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், ரியாத் தாக்கல் செய்த மற்றொரு மனுவில் தனது மகளும், அந்த இளைஞரும் சட்டப்படியான திருமண வயதை எட்டவில்லை என்றும் அதனால் அவர்கள் திருமணம் செல்லாது என்றும் அது குழந்தை திருமணத் தடைச்சட்டத்தின் கீழ் வரும் என்றும் இதனால் அந்த திருமணத்தை ரத்து செய்து, தனது மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வி.சிதம்பரேஷ், கே.பி.ஜோதிர்நாத் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ”சமூகத்தில் திருமணம் செய்யாமல் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழவில்லை, லிவிங் டுகெதர் என்ற முறை நம் சமூகத்தில் இல்லை என்று கண்ணைக் கட்டிக்கொண்டு மறுக்க முடியாது. பெண்ணுக்குத் திருமண வயது 21, ஆணுக்கு திருமணவயது 23 என்று சட்டத்தில் உள்ளது என்பது திருமணத்தைப் பதிவு செய்வதற்காகத்தான். ஆனால், 18 வயது ஆன ஆணும், பெண்ணும் யாருடன் தாங்கள் சேர்ந்து வாழவேண்டும் என முடிவு செய்வது அவர்களின் உரிமை. இதில் நீங்களும், நீதிமன்றமும் தலையிட முடியாது.

வயது வந்த இருவரின் உறவுகளையும், உரிமைகளையும் நீதிமன்றம் மதிக்கிறது. அந்தப் பெண், அந்த இளைஞருடன் சேர்ந்து சுதந்திரமாக வாழத் தடையில்லை. திருமண வயதை அடைந்தபின் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். சட்டப்பூர்வமாக அவர்கள் இருவரும் திருமணம் செய்யாவிட்டாலும், நடைமுறையில், எதார்த்த வாழ்வில் கணவன், மனைவியாக வாழ்கிறார்கள். 18 வயது நிரம்பிய பெண் தனக்குப் பிடித்தமான ஆணுடன் சேர்ந்து வாழ உரிமை இருக்கிறது. அவர் எங்கு வேண்டுமானாலும் சென்று சேர்ந்து வாழலாம். சட்டப்படியாக அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும்வரை சேர்ந்து வாழத் தடையில்லை. அவர்களைப் பிரிக்க உத்தரவிட முடியாது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply