சிங்கப்பூரில் மோடி ஓவியம் வாங்கியது எப்படி தெரியுமா?
அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அழகிய மதுபானி ஓவியத்தை ரூபே கார்டு மூலம் வாங்கியுள்ளார்.
பாரத பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் சிங்கப்பூருக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது பிரதமர் மோடி இந்திய அன்னியச் செலாவணிக்கு மாற்றான ‘பிம், ருபே, எஸ்.பி.ஐ.’ மொபைல் ஆப்களை கடந்த 31-ம் தேதி சிங்கப்பூர் மக்களிடையே அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகமாக வாழும் லிட்டில் இந்தியா என்ற பகுதியில் கேம்ப்பெல் சாலையில் அமைந்துள்ள இந்திய பாரம்பரியக் கலைகள் கண்காட்சி கூடத்துக்கு இன்று பிரதமர் மோடி சென்றார். அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த அழகிய மதுபானி ஓவியத்தை விலைக்கு வாங்க முடிவு செய்த பிரதமர், அதற்கான விலையை ருபே கார்ட்’ மூலம் செலுத்தினார்.
நேபாளம் மற்றும் இந்தியாவில் உள்ள மிதிலை நகரில் மதுபானி ஓவியங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.