தென்மாநிலங்களில் பாஜக தேருமா?
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகின்றனர். குறிப்பாக பாஜக அல்லாத கட்சிகள் பாஜகவை வீழ்த்த வியூகங்கள் அமைத்து வருகின்றன.
பாஜகவுக்கு சவாலாக இருப்பது தென் மாநிலங்கள் மட்டுமே. தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில், கர்நாடகாவை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜக பலவீனமாக உள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் ஆளும் அரசுகள் மீது அதிக அதிருப்தி இல்லாததால், பாராளுமன்ற தேர்தல்களிலில் சந்திரபாபு நாயுடு மற்றும் சந்திரசேகரராவ் கட்சிகள் வெற்றி பெறும் நிலையில் உள்ளன. கேரளாவில் பாஜக இன்னும் வளர்ச்சி அடையாததால் ஒற்றை இலக்கத்தில் வெற்றி பெற்றாலே அது பெரிய விஷயமாக பார்க்கப்படும்
தமிழகத்தில் அதிமுக அல்லது ரஜினிகாந்த் அல்லது இருவருடனுமும் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே பாஜக ஓரளவுக்கு வெற்றியை பெற முடியும். ஆனால் இது சாத்தியமா? என்பதை போகப்போகத்தான் பார்க்க வேண்டும்
தென் மாநிலங்களில் மட்டும் 130 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் எத்தனை தொகுதிகளை பாஜக பெறுகிறது என்பதை வைத்தே மீண்டும் பாஜக ஆட்சி தொடருமா? அல்லது முடிவுக்கு வருமா? என்பது தெரியவரும்.