பிரதமர் கனவு 20க்கும் மேற்பட்டவர்களிடம் உள்ளது: மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ்

பிரதமர் கனவு 20க்கும் மேற்பட்டவர்களிடம் உள்ளது: மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ்

2019ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆகிவிடலாம் என 20க்கும் மேற்பட்டோர் கனவு காண்பதாகவும், ஆனால் அவர்களுடைய கனவு பலிக்காது என்றும் ஏனெனில் 2019ஆம் ஆண்டின் பிரதமர் பதவி காலியாக இல்லை என்றும், மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்

கோவாவில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கி வருகிறது. ஊழலை ஒழிக்க பாஜகவால் தான் முடியும். அத்தகைய இந்தியாவை உருவாக்க மோடி போராடி வருகிறார். அவருடைய அசாத்திய நடவடிக்கைகளில் சர்ஜிகல் ஸ்டிரைக் மிகச் சிறந்த உதாரணம்.

வரும் 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் ஆவதற்கு, எதிர்க்கட்சிகளில் 20க்கும் மேற்பட்டோர் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்க போவதில்லை. ஏனெனில் பிரதமர் பதவி காலி இல்லை. அடுத்த ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அப்போதும் மோடி பிரதமர் ஆவார் என்று நக்வி தெரிவித்தார்.

Leave a Reply