நீட் தேர்வு தோல்வி எதிரொலி: தமிழக மாணவி தற்கொலை
சென்ற ஆண்டு நீட் தேர்வால் அரியலூர் அனிதா தற்கொலை செய்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் தமிழகம் மீண்டு வராத நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டுகான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகிய நிலையில் தமிழகத்தில் இந்த தேர்வெழுதிய 1.2 லட்சம் மாணவர்களில் 45336 மாணவர்கள் மட்டுமே தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளனர்.
இதனிடையே, நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் செஞ்சி அருகே உள்ள வெள்ளூந்தூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கூலி வேலை செய்து தனது மகளை படிக்க வைத்து வந்த அவரது பெற்றோர் இதனால் மிகுந்த வருத்தத்த்திற்கு உள்ளாகி உள்ளனர். உயிரிழந்த மாணவி பிரதீபா 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் 1125 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.