ஐஆர்சிடிசி-யின் புதிய இணையதளத்தில் ரயில் டிக்கெட் புக் செய்வது எப்படி?
பயணிகளுக்கு ரயில் டிகெட் பதிவு செய்யும் வசதியை ஐஆர்சிடிசி இணையதளம் தற்போது புதியதாக வடிவமைத்துள்ளது. இந்த புதிய மேம்படுத்தப்பட்ட இணையதளத்தில் எவ்வாறு ரயில் டிக்கெட் பதிவு செய்யலாம் என்பதை தற்போது பார்ப்போம்
1)நீங்கள் வழக்கமான ஐஆர்சிடிசி இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அந்த பக்கத்தின் இடது பக்கத்தில் உள்ள புதிய இணையதளத்திற்கான ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
2) அது உங்களை புதிய பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அந்த பக்கத்தில் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய சில கேள்விகள் இருக்கும். அதில் நீங்கள் புறப்படும் இடத்தையும் நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும். பிறகு எந்த நாளில் பயணிக்க விரும்புகிறீர்களோ அந்த நாளை குறிப்பிட வேண்டும்.
3)அதன் பிறகு எந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். தற்போது எந்த ரயிலில் எத்தனை இருக்கை இருக்கிறது என்பதையும் வெயிட்டிங் லிஸ்டில் விவரங்கள் கிடைக்கும். இந்த புதிய வெர்ஷனில் கூடுதலாக உங்களது டிக்கெட் எவ்வளவு சதவிகிதம் உறுதியாக கிடைக்கும் என்ற தகவலையும் கொடுக்கும்.
4) மேலும் புதிதாக விகால்ப் ஸ்கீம் அறிமுகமாகியுள்ளது. உதாரணத்திற்கு நீங்கள் ஒரு ரயிலில் டிக்கெட் புக் செய்துள்ளீர்கள், ஆனால் உங்களுக்கு உறுதியாகும் சதவிகிதம் குறைவாக இருந்தால், வேறு ரயிலில் நீங்கள் டிகெட் பதிவு செய்யலாம்.
இதன் பிறகு நீங்கள் புக் நெளஎன்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். உங்கள் ஐஆர்சிடிசியின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேடு சேர்த்து பதிவு செய்ய வேண்டும் . இதன்பிறகு கிரெடிட் கார்டு அல்லது வேறேதேனும் வகையில் பணம் செலுத்தவேண்டும்.