சூர்யா பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட சாயிஷா
சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் `தானா சேர்ந்த கூட்டம்’. இந்த படத்தில் அனிருத் இசையில் உருவான `சொடக்கு மேல சொடக்கு போட்டு’ என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இளளஞர்களின் விருப்பத்திற்குரிய இந்த சொடக்கு பாடலுக்கு தான் நடனமாடும் வீடியோவை சாயிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சாயிஷா தற்போது கார்த்தி ஜோடியாக கடைக்குட்டி சிங்கம், விஜய் சேதுபதி ஜோடியாக ஜுங்கா, ஆர்யா ஜோடியாக கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்து வருகிறாஅர். இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் இந்த படங்கள் வெளியானவுடன் அவருடைய மார்க்கெட் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜுங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜுன் 11-ஆம் தேதி நடைபெறுகிற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இந்த ஆண்டு சாயிஷாவுக்கு கொண்டாட்டமாக வருடமாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. மேலும் சூர்யா – கே.வி.ஆனந்த் இணையும் புதிய படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க சாயிஷாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.