ஜேம்ஸ்பாண்டின் முதல் நாயகி காலமானார்

ஜேம்ஸ்பாண்டின் முதல் நாயகி காலமானார்

உலகம் முழுவதும் ஜேம்ஸ்பாண்ட் படம் என்றால் அப்படி ஒரு ஈர்ப்பு பார்வையாளர்களிடையே இருப்பதுண்டு. இந்த நிலையில் ஜேம்ஸ் பாண்ட்’ பட வரிசையின் முதல் படம் ‘டாக்டர் நோ’ என்பது ஜேம்ஸ்பாண்ட் ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் கதாநாயகனாக சீன் கேனரி மற்றும் கதாநாயகியாக யூனிஸ் கேசன் ஆகியோர் நடித்திருந்தனர். 1962-ம் ஆண்டு வெளியான இந்த படம் வசூல் மழை பொழிந்தது.

இந்த நிலையில் முதல் ஜேம்ஸ்பாண்ட் படத்தின் நாயகியான யூனிஸ் கேசன் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 8-ம் தேதி லண்டன் நகரில் உள்ள இல்லத்தில் தனது 90-வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு முதன்முதலாக ஜேம்ஸ் பாண்ட் படத்தின் நாயகியாக நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஹாலிவுட், பிரிட்டன் திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல் படமான ‘டாக்டர் நோ’ படத்திற்கு பின்னரும் சீன் கேனரியுடன் ‘பிரம் ரஷியா வித் லவ்’ என்னும் படத்தில் யூனிஸ் கேசன் ஜோடியாக இணைந்து நடித்தார். அதன் பின்னர், வேறு சில ஹாலிவுட் படங்களில் நடித்த யூனிஸ் கேசன், பிற்காலத்தில் தொலைக்காட்சி நாடகங்களிலும், தொடர்களிலும் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply