மது விற்பனையை கண்டுபிடிக்க பழக்கப்படுத்தப்படும் நாய்
பீகார் மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அம்மாநிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக ஒருசிலர் மது விற்பனை செய்து வருவதாக அரசுக்கு புகார்கள் வந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் மது விற்பனையை கண்டுபிடிக்க மோப்பசக்தி பயிற்சி பெற்ற நாய்களை பயன்படுத்த பீகார் அரசு முடிவு செய்துள்ளது.
பீகார் மாநிலத்தில் மது ஒழிப்பு பயன்பாடு அமலுக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. இருப்பினும் அங்கு பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை அதிகரித்து வருகிறது.
ஆங்காக்கே பதுக்கி வைத்து மதுவை சில கும்பல் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இதற்கு முடிவுகட்ட மதுவை மோப்பம்பிடிக்கும் சிறப்பு பயிற்சி பெற்ற நாய்களை தெலங்கானா அரசிடம் இருந்து பீகார் அரசு பெறவுள்ளது.
8 – 9 மாதங்கள் வரை பயிற்சி அளிக்கப்பட்ட இந்த நாய்கள், வெடிமருந்து மற்றும் மது ஆகியவற்றை மோப்பம்பிடிப்பதில் சிறந்தவையாக திகழ்கிறது.
இந்த நாய்களின் மூலம் மதுவை கண்டறியும் திட்டம் வெற்றிகரமாக முடிந்தால், இன்னும் சில மோப்ப நாய்களை பெற முடிவு செய்துள்ளது பீகார் அரசாங்கம்.