பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான்கானுடன் மோதும் முன்னாள் பிரதமர்

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான்கானுடன் மோதும் முன்னாள் பிரதமர்

பாகிஸ்தான் நாட்டில் வரும் ஜூலை மாதம் 25-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து வருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி அட்டாக் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இவர் இந்த தொகுதியில் ஏற்கனவே 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த தேர்தலில் அப்பாசி இஸ்லாமாபாத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் போட்டியிட உள்ள நிலையில் அவரை எதிர்த்து போட்டியிடுவதற்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் அங்கு ஏற்ற நபர் இல்லை என்பதால் இம்ரான்கானை எதிர்த்து அப்பாசி போட்டியிடுவார் என கூறப்படுகிறது.

அப்பாசி போட்டியிடுவது உறுதி எனில் இம்ரான்கான் வேறு தொகுதிக்கு மாற வாய்ப்பு உள்ளதாக தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply