மாணவர்கள் தற்கொலையை அரசியலாக்குவதா? நீதிபதி கண்டனம்
நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களின் தற்கொலையை அரசியல் கட்சி தலைவர்கள் அரசியல் ஆக்கி வருவதாக சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த வழக்கு ஒன்றின் விசாரணை நேற்று சென்னை ஐகோர்ட்டில் நடந்தபோது கருத்து கூறியநீதிபதி கிருபாகரன், ‘நீட் தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளாமல் இருக்க முன் கூட்டியே அறிவுரை வழங்காமல் இறந்த பின்னர் கண்ணீர் வடிப்பதாகவும், மாணவர்கள் தற்கொலை சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்
மேலும் மாணவர்கள் தற்கொலையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 வாரத்திற்குள் பதில் அளிக்கவும், பள்ளி ஆசிரியர்களை வைத்தே மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்க முடியுமா என்பது குறித்து பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.