போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம்: எஸ்.ஏ.சி

போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம்: எஸ்.ஏ.சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூத்துகுடிக்கு சென்ற தினம் செய்தியாளர்களிடம் பேசியபோது போராட்டம் ஒரு ஒரு கருத்தை கூறினார். அவர் சொன்னதை புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் நடித்து அவரை நேரடியாகவும், மறைமுகமாகவும் பலர் விமர்சனம் செய்து ரஜினி மீதான தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த சினிமா விழா ஒன்றில் பேசிய இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் என்று ரஜினியை மறைமுகமாக தாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

டிராபிக் ராமசாமி வாழ்க்கை வரலாறு திரைப்படம் வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால் கூட குழந்தை அழுதால் தான் கிடைக்கும், போராட வேண்டாம் என்றால் எப்படி? காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா? மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது? தூத்துக்குடி போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது? போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம். டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும் ” என்று கூறினார்.

Leave a Reply