பெட்ரோல் விலையை திடீரென ரூ.9 குறைத்த ராஜ்தாக்கரே

பெட்ரோல் விலையை திடீரென ரூ.9 குறைத்த ராஜ்தாக்கரே

மகாராஷ்ட்ரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைர் ராஜ் தாக்கரே தனது 50வது பிறந்தநாளை முன்னிட்டு, மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.9 வரை குறைத்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்தார். இதனால் பொதுமக்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினர்

மகாராஷ்ட்ரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவராக இருக்கிறார் ராஜ் தாக்கரே. இன்று அவருக்கு 50 வது பிறந்தநாள். இந்தநாளை வெகு விமரிசையாகக் கொண்டாட விரும்பினார்.

இதனால் மகாராஷ்டிராவில் குறிப்பிட்ட பெட்ரோல் பங்குகளில் 1 லிட்டர் பெட்ரோல் விலையில் 4 ரூபாய் முதல் 9 ரூபாய் வரையில் குறைத்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இதை எதிர்பார்க்காத மகாராஷ்ட்ரா மக்கள், பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் நின்று, வாகனங்களுக்கு பெட்ரோல் வாங்கிச் சென்றனர்.

Leave a Reply