அமெரிக்க அதிபரை அடுத்து ரஷ்ய அதிபரை சந்திக்கும் கிம் ஜாங் உன்
சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பில் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனால் கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்புவதோடு, மூன்றாம் உலகப்போரும் தவிர்க்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில்ல் ரஷியா அதிபர் விளாடிமிர் புதின், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்னை ரஷ்யா வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று கிம் ஜாங் உன் விரைவில் ரஷ்யா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ட்
டிரம்ப் மற்றும் கிம் சந்திப்புக்கு பின்னர் சமீபத்தில் வடகொரியாவின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான கிம் யோங் நம்-மை ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு உறவுகள் குறித்து அவர்கள் பேசியதாகவும் டிரம்ப் – கிம் சந்திப்பு குறித்து புதின் தனது மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் கிம் ஜாங் அன்-னை தான் சந்திக்க விரும்புவதாக கிம் யோங் நம்-யிடம், புதின் தெரிவித்துள்ளதாகவும் இந்த சந்திப்பு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறலாம் எனவும், இதற்கான அறிவிப்புகளை விரைவில் இருநாடுகளும் வெளியிடலாம் எதிர்பார்க்கப்படுகிறது.