15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்
சூரிய மண்டலத்தில் உள்ள 9 கிரகங்களும் சூரியனை சுற்றி வருகின்றன.
அவ்வாறு சுற்றி வரும் செவ்வாய் கிரகம் அடுத்த மாதம் (ஜூலை) 27-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து பார்த்தால் செவ்வாய் கிரகம் நன்றாக தெரியும்.
ஏனெனில் சூரிய கதிர்களால் பிரதிபலிக்கப்பட்டு அது பிரகாசிக்கும். இந்த தகவலை அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தெரிவித்துள்ளது.
இத்தகைய அதிசய நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக கடந்த 2003-ம் ஆண்டு பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வந்தது.
தற்போது நிகழும் இந்த சம்பவம் சுமார் ஒரு வாரம் வரை நீடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.