மனித உரிமை ஆணையத்தில் இருந்து திடீரென அமெரிக்கா விலகியது ஏன்?

மனித உரிமை ஆணையத்தில் இருந்து திடீரென அமெரிக்கா விலகியது ஏன்?
மனித உரிமை ஆணையத்திலிருந்து அமெரிக்கா திடீரென விலகுவதாக ஐ.நா. சபைக்கான அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹாலே அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நிக்கி ஹாலே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், ‘மனித உரிமைகள் ஆணையம் தனது பெயருக்கு உரிய விதத்தில் செயல்படவில்லை என்றும், அதனால் அதில் இருந்து விலக முடிவுசெய்ததாகவும் கூறியுள்ளார். 
மேலும், அமெரிக்கா நம்பிக்கை வைக்கும் அமைப்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் இருக்க வேண்டும் எனில் அதில் சில மாற்றங்கள் வேண்டும் என்றும் ஹாலே அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார். ஐ.நா. சபையில் மனித உரிமைகள் பாதுகாப்புக்கான இந்த அமைப்பில் அமெரிக்கா விலகலைத் தொடர்ந்து 46 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 

Leave a Reply