தமிழர்கள் இந்தி கற்று கொள்ள வேண்டும்: கவர்னர் புரோஹித்

தமிழர்கள் இந்தி கற்று கொள்ள வேண்டும்: கவர்னர் புரோஹித்

கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள ஒருசில அரசியல் கட்சிகள் இந்தி எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ‘தமிழர்கள் இந்தி கற்று கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது ஆய்வு நடத்தி வரும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ‘தமிழர்கள் இந்தி கற்று கொள்வதால் வடமாநிலங்களில் வேலைக்கு செல்வதும், அங்கு வசிப்பதும் எளிதாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே ஆளுனர் ஆய்வு நடத்தி வருவதற்கு திமுக உள்பட ஒருசில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழர்கள் இந்தி கற்று கொள்ள வேண்டும் என்று கவர்னர் புரோஹித் கூறியதற்கும் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply