இஸ்லாமியர்களுக்கு தடை: டிரம்ப் உத்தரவை ஏற்றது உச்சநீதிமன்றம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வருவதைத் தடை செய்து பிறப்பித்த உத்தரவு ஒன்றை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரான், வடகொரியா, ஏமன், சிரியா, வெனிசுலா, லிபியா, சோமாலியா, சாட் போன்ற இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்தார். மேலும் இந்த நாடுகளின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மட்டுமே அமெரிக்காவிற்கு வர அனுமதி வழங்கப்படும் என்றும் ட்ரம்ப் உத்தரவிட்டார்.
டிரம்பின் இந்த உத்தரவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், இதற்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த தடை உத்தரவை ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதனால் இஸ்லாமிய நாடுகள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.