கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் கூண்டோடு ராஜினாமா: காங்கிரஸ் நிர்வாகிகள் மிரட்டல்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளும் மக்கள் ஜனநாயக கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. எனவே, மெகபூபா முப்தி முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அங்கு கவர்னர் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் கூண்டோடு ராஜினாமா செய்வோம் என ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக இருந்து வருபவர் சரூரி. இந்தர்வால் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வரும் அவர், கட்சியினர் கூறும் எந்த புகார்களையும் மேலிடத்துக்கு தெரிவிப்பதில்லை. எங்களுக்கு தேவையான உதவிகளையும் அவர் செய்து தருவதில்லை.
காங்கிரஸ் கட்சியில் அவருக்கு செல்வாக்கு இருப்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் நாங்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய உள்ளோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்