என் மகனுக்கு தூக்கு தண்டனை வழங்குங்கள்: ஒரு தந்தையின் ஆவேச குரல்

என் மகனுக்கு தூக்கு தண்டனை வழங்குங்கள்: ஒரு தந்தையின் ஆவேச குரல்

மத்தியப் பிரதேசத் மாநிலத்தில் பள்ளிக்கு வெளியில் நின்று கொண்டிருந்த 8 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த குற்றத்தை செய்த இளைஞரின் ஒருவரின் தந்தை செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘என் மகன் தவறு செய்தது உறுதிப்படுத்தப்பட்டால் தூக்குத் தண்டனை வழங்குங்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

அதேபோல் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க மத்தியபிரதேச அரசு முன்வந்தபோது, ‘எங்களுக்கு இழப்பீடு எதுவும்ன் வேண்டாம் என்றும், குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் சிறுமியின் தந்தை ஆவேசமாக கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், நேர்மையான விசாரணைக்கு பின்னர் குற்றம் உறுதி செய்யப்பட்டால் அந்த குற்றவாளிக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் என்றும் மத்திய பிரதேச அரசு வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply