ப.சிதம்பரத்தை ஏன் கைது செய்ய கூடாது: சிபிஐ கேள்வி

ப.சிதம்பரத்தை ஏன் கைது செய்ய கூடாது: சிபிஐ கேள்வி

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரம் அவர்களை கைது செய்வதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டிப்பு செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி ரூபாய் அளவில் அந்நிய முதலீடுகளை பெற சட்டத்திற்கு புறம்பாக வழிவகை செய்தாக சிதம்பரத்தின் மகன் கார்த்திக்சிதம்பரம் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதுகுறித்து கார்த்திக்சிதம்பரம் குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து ஆதாயம் பெற்றதாகவும் சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டது

இந்த வழக்கில் கார்த்திக்சிதம்பரம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள நிலையில், அவரது தந்தையும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ. முயற்சித்து வருகிறது. இதுகுறித்து ஜூன் 6ம் தேதி சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜரான சிதம்பரத்திடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடந்தது

இந்த வழக்கில் உரிய ஒத்துழைப்பு வழங்கப்படுவதால் தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்று சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடா்ந்தார்.. அதன் அடிப்படையில் சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 3ம் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இடைக்கால தடை உத்தரவு இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து தடை உத்தரவை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று சிதம்பரம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட டெல்லி ஐகோர்ட் சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதனிடையே சிதம்பரத்தை ஏன் கைது செய்து விசாரணை நடத்தக் கூடாது என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்வி எழுப்பி உள்ளனா். சி.பி.ஐ.யின் கேள்வி குறித்து ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் பதில் விளக்கம் அளிக்குமாறு சிதம்பரத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply