ராகுல் காந்தி கோகைய்ன் பயன்படுத்துபவரா? சு.சுவாமியின் சர்ச்சை கருத்து
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மருத்துவ பரிசோதனை மேற்கொண்டால் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவரும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் அம்ரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் போதைப் பொருட்கள் கடத்துவதும், விற்பனை செய்வதும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதைத் தடுக்க அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி போதை மருந்துகளை கடத்துவதில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.
பஞ்சாப் அரசு அறிவிப்பில், பஞ்சாப் அரசு ஊழியர்கள் அனைவரும், ஒவ்வொரு வருடமும் மருத்துவ சோதனை மேற்கொள்ள வேண்டும். என்றும், அந்த சோதனையில் அவர்கள் போதை மருந்துகள் பயன்படுத்தவில்லை என்று உறுதி செய்ய வேண்டும்” என்று அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப் அரசின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, பஞ்சாப் முதல்வர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த சோதனையில் ராகுல் காந்தியை ஈடுபடுத்துவது சரியானதாக இருக்கும். ராகுல் காந்தி கொக்கைன் என்னும் போதைப் பொருளை பயன்படுத்துகிறார். அவர் மருத்துவ சோதனை செய்தால் போதைப் பொருள் சோதனையில் தோல்வியடைவார்.” என்று கூறியுள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.