அமித்ஷா இன்று சென்னை வருகை: தமிழகத்தில் பாஜக காலூன்றுமா?

அமித்ஷா இன்று சென்னை வருகை: தமிழகத்தில் பாஜக காலூன்றுமா?

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். அவரை வரவேற்க பாஜகவினர் தீவிர ஏற்பாடு செய்துள்ளனர். அவருடைய வருகை தமிழக அரசியலில் ஒரு தாக்கத்தையும், பாஜக தொண்டர்களுக்கு உற்சாக ஊக்கத்தையும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ.க. போன்ற தேசிய கட்சி ஒன்று தமிழகத்தில் காலூன்றுவது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது. இருப்பினும் தமிழகத்தில் காலூன்றி பாஜக தேசிய தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இன்று காலை 11 மணிக்கு சென்னை வரும் அமித்ஷா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பகல் 12 மணிக்கு வி.ஜி.பி. தங்க கடற்கரை சாலைக்கு வருகிறார். பகல் 12 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை எங்கள் உயர் மட்ட நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். பிற்பகல் 2 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை உணவு நேரம்.

அதனைத்தொடர்ந்து மாலை 4 மணி வரை பா.ஜ.க. பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை சகோதர இயக்கங்களுடன் கலந்துரையாடுகிறார். மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி சக்தி மற்றும் மகா சக்தி கேந்திரா அமைப்பின் பொறுப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

அமித்ஷாவின் சென்னை வருகையில் எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் இடம்பெற போவதில்லை. முக்கிய பிரமுகர்கள் யாரையும் சந்திக்கவும் திட்டம் இல்லை. பத்திரிகையாளர் சந்திப்பும் கிடையாது. இது அமைப்பு ரீதியான ஒரு கூட்டம். இது முழுக்க முழுக்க பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க.வை தயார்படுத்தும் நிகழ்வுக்காக நடைபெறும் முக்கிய கூட்டம். இதில் அதற்கான வியூகங்கள் வகுப்பது குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட உள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

Leave a Reply